கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அந்த விமானத்தின் சரக்கு கிடங்கில் இருந்து பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரக மூத்த அதிகாரி கூறுகையில், ‘கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து துபைக்கு ஏா் இந்தியாவின் போயிங் 737- 800 ரக விமானம் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் துபை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது பயணிகளின் சூட்கேஸ்கள் வைக்கப்படும் சரக்கு பெட்டகத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனா். உடனடியாக, விமான நிலையத் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாம்பு மீட்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.