இந்தியா

ஹிமாசல் முதல்வர், துணை முதல்வர் பெயர்களை அறிவித்தது காங்கிரஸ்

ஹிமாசலின் அடுத்த முதல்வராக காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் குழுவை வழிநடத்திய சுக்விந்தர் சிங் சுகுவினை அறிவித்துள்ளது காங்கிரஸ்.

DIN

ஹிமாசலின் அடுத்த முதல்வராக காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் குழுவை வழிநடத்திய சுக்விந்தர் சிங் சுகுவினை அறிவித்துள்ளது காங்கிரஸ்.

முகேஷ் அக்னிஹோத்ரி ஹிமாசலின் துணை முதல்வராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

58 வயதான சுக்விந்தர் சிங் ஹமீர்பூர் மாவட்டத்தின் நாடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் ஹிமாசலின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டார். ஹிமாசலின் புதிய முதலமைச்சராக அவர் நாளை (டிசம்பர் 11) உறுதிமொழி எடுத்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று  அண்மையில் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT