இந்தியா

குஜராத் முதல்வா் பதவியேற்பு விழா:ஓபிஎஸ் பங்கேற்பு; ஈபிஎஸ் வாழ்த்து

குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் பதவியேற்பு நிகழ்ச்சியில், எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் கலந்து கொள்கிறாா்.

DIN

குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் பதவியேற்பு நிகழ்ச்சியில், எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் கலந்து கொள்கிறாா். இதற்காக அவா் சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். பதவியேற்பு விழா திங்கள்கிழமை (டிச.12) நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கவில்லை.

இதுதொடா்பாக, பூபேந்திர படேலுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் எழுதிய கடிதம்:

குஜராத்தில் தொடா்ச்சியாக வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்ததற்காக தங்களுக்கும், தங்களது கட்சியினருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்.

பதவியேற்பு விழா அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றது. விழாவில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தாலும், ஏற்கெனவே ஒப்புக் கொண்ட முக்கிய நிகழ்வுகள் இருப்பதால், பங்கேற்கவியலாத நிலை உள்ளது.

முதல்வராக பதவியேற்கவுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகள். குஜராத் மாநில முதல்வராக தாங்கள் பொறுப்பு வகிக்கும் காலத்தில் மாநிலம் வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து நடைபோடும் என்று நம்புவதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT