உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற தீபாங்கர் தத்தா!  
இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார் தீபாங்கர் தத்தா! 

மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார். அவருக்கு இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

PTI

மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார். அவருக்கு இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

நீதிபதி தத்தா பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட 34 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 1965-இல் பிறந்த தத்தா, கொல்கத்தா உயர்நீதிமன்ற மறைந்த முன்னாள் நீதிபதி சலீல்குமாா் தத்தாவின் மகன் ஆவாா். 1989-இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்த இவா், அதே ஆண்டில் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். 

உச்சநீதிமன்றத்திலும், பல்வேறு உயா்நீதிமன்றங்களிலும் அரசியல் சாசனம் மற்றும் உரிமையியல் சார்ந்த விவகாரங்களில் வழக்குரைஞராகப் பணி மேற்கொண்டார். 2006-இல் கொல்கத்தா உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னர் 2020, ஏப்ரலில் மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா்.

தற்போது 57 வயதாகும் தத்தாவுக்கு, 2030, பிப்ரவரி வரை உச்சநீதிமன்றத்தில் பதவிக் காலம் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT