இந்தியா

மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார் டிம்பிள் யாதவ்!

உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜவாதி கட்சியின் டிம்பிள் யாதவ் மக்களவையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

DIN

உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜவாதி கட்சியின் டிம்பிள் யாதவ் மக்களவையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி மெயின்புரி மக்களவைத் தொகுதி  இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். 

கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் மெயின்புரி தொகுதிக்கான வாக்கு எண்ணிகை டிச. 8ஆம் தேதி நடைபெற்றது. 

இதில், டிம்பிள் யாதவ் 6,17,625 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர்கள் ரகுராஜ் சிங்கைவிட 2,88,136 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் இன்று டிம்பிள் யாதவ் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT