இந்திய விமானப் படை உணவகத்துக்குச் செல்ல வேண்டிய 4,000 முட்டைகள் திருட்டு 
இந்தியா

இந்திய விமானப் படை உணவகத்துக்குச் செல்ல வேண்டிய 4,000 முட்டைகள் திருட்டு

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திய விமானப் படை முகாம் உணவகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய 4,000 முட்டைகளை ஆட்டோரிக்சா ஓட்டுநர் கடத்திச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

PTI


குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திய விமானப் படை முகாம் உணவகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய 4,000 முட்டைகளை ஆட்டோரிக்சா ஓட்டுநர் கடத்திச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முட்டை கிடங்கில் இருந்து, இந்திய விமானப் படை முகாமில் உள்ள உணவகத்துக்கு ஒரு ஆட்டோ ரிக்சாவில் 4,000 முட்டைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஆட்டோ ரிக்சா உணவகத்துக்குச் சென்றுசேரவில்லை.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, முட்டையோடு தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகிறார்கள்.

மற்றொரு ஆட்டோ ரிக்சாவில் காய்கறிகள் ஏற்றி அனுப்பியிருந்த நிலையில், அது உணவகத்துக்குச் சென்று சேர்ந்துவிட்டதாகவும்,  முட்டைகள் மட்டும் கடத்திச்செல்லப்பட்டுள்ளதர்கவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக அரசுக்கு கேள்விகள்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டா்: சொந்த செலவில் வழங்கினாா் அமைச்சா் காந்தி

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி, பிரிட்டன் பயணம் ரூ.15,516 கோடி அந்நிய முதலீடுகளை ஈர்த்திருப்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

இறைச்சித்தம் வழங்கிய தலைமைக் கொடை!

SCROLL FOR NEXT