450 மருத்துவப் பரிசோதனைகள் இலவசம்: தில்லி அரசு அதிரடி அறிவிப்பு 
இந்தியா

450 மருத்துவப் பரிசோதனைகள் இலவசம்: தில்லி அரசு அதிரடி அறிவிப்பு

மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற உதவிய மக்களுக்கு, 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

PTI

புது தில்லி: மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற உதவிய மக்களுக்கு, 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார ஆரம்ப மையங்களில், 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தற்போது, தில்லி அரசால் இலவசமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை 212 ஆக உள்ளது.

இந்த நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு, சுகாதாரத் துறைக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார ஆரம்ப மையங்களில் மேலும் 238 மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

இந்த வசதிகள் அனைத்தும் தில்லி மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

DINAMANI வார ராசிபலன்! | Nov 23 முதல் 29 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

SCROLL FOR NEXT