நிதீஷ் குமார் (கோப்புப் படம்) 
இந்தியா

2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நான் அல்ல: பிகார் முதல்வர்

2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளர் அல்ல என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

DIN

2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளர் அல்ல என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

மேலும், 2025ஆம் ஆண்டு பிகாரில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை தற்போது துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி யாதவ் வழிநடத்துவார் எனவும் குறிப்பிட்டார். 

7 கூட்டணி கட்சிகள் இணைந்த மகா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் நிதீஷ்குமார் பேசியதாவது, 2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நான் அல்ல. 2024 தேர்தலில் தில்லியிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்பதே நமது இலக்கு. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருகிறேன். 

2025ஆம் ஆண்டு நடைபெறும் (பிகார்) சட்டப்பேரவைத் தேர்தல் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் நடைபெறும். அவரே அனைவரையும் வழிநடத்துபவராகவும் இருப்பார் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT