இந்தியா

2026-ல் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும்.. எப்போது கட்டப்படும்?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்ட தொடங்குவீர்கள் என மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்ட தொடங்குவீர்கள் என மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தில்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் கூடுதல் நிதிக்கான ஒப்புதல் வழங்குவது தொடர்பான விவாதம் நடைபெற்றது.

இதில் பேசிய மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். ஆனால், எப்போது கேள்வி எழுப்பினாலும் எம்ய்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது பற்றியே பாஜக அமைச்சர்கள் பதிலளிக்கிறார்கள். நேற்று பேசும்போதும் 2026ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என பாஜக அமைச்சர் கூறுகிறார். ஆனால் மருத்துவமனையை எப்போது திறப்பீர்கள் என்பது பற்றி அல்ல எங்கள் கேள்வி, எப்போது கட்டத்தொடங்குவீர்கள்?

பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு திட்டத்தை தொடங்குங்கள் என எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் துவங்காத ஒரு திட்டத்தை முடிப்பது குறித்தும் திறப்பு விழா நடத்துவது குறித்தும் பேசி வருகிறார்கள் என விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT