இந்தியா

கரோனாவை அடுத்து அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்: கர்நாடகத்தில் 5 வயது சிறுமிக்கு பாதிப்பு

ANI


பெங்களூரு: புனே ஆய்வுக்கூடம் அளித்த தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இதுவே முதல் முறை. நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

ஜிகா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள எங்கள் துறை தயார் நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, புனேவில் உள்ள 67 வயது நபருக்கு கடந்த மாதம் இறுதியில் ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.  இவர் நாசிக் பகுதியில் வசித்து வந்த நிலையில், நவம்பர் 6ஆம் தேதி புனே வந்திருந்த போது ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

நவம்பர் 16ஆம் தேதி கடும் காய்ச்சல், இருமல், மூட்டு வலி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பிறகு சிகிச்சையின் பயனாக அவர் குணமடைந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி ஸ்ரீமதி மரணவழக்கு விசாரணை: பள்ளி தாளாளர் உள்பட மூவர் ஆஜர்

நல்ல மனநிலை! மாதுரி..

சண்டீகரில் மணீஷ் திவாரி வேட்புமனு தாக்கல்!

நாய்கள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!

சென்னை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனிவழி: கைவிட இப்படி ஒரு காரணமா?

SCROLL FOR NEXT