இந்தியா

பாஜகவில் இணைந்த மேகாலயா எம்எல்ஏக்கள்!

மேகாலயா மாநிலத்தில் ஆளும் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் உள்பட 4 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். 

DIN

மேகாலயா மாநிலத்தில் ஆளும் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் உள்பட 4 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். 

தில்லியில் பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி.நட்டா முன்னிலையில் ஃபெர்லின் சங்மா, சாமுவேல் சங்மா, பெனெடிக் மரக் மற்றும் ஹெச்.எம்.ஷாங்ப்லியாங் ஆகிய நால்வரும் பாஜகவில் இணைந்தனர்.

இதில் ஃபெர்லின் சங்மா, பெனெடிக் மரக் ஆகிய இருவரும் ஆளும் தேசிய  மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சமீபமாக பாஜகவுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன. 

மேலும் சாமுவேல் சங்மா சுயேச்சை எம்எல்ஏ. மற்றொரு எம்எல்ஏவான ஹெச்.எம்.ஷாங்ப்லியாங் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 

2023 ஆம் ஆண்டில் மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையில்லா போகி: ஆட்சியா் கோரிக்கை

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

SCROLL FOR NEXT