இந்தியா

அமிதாப் பச்சனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மம்தா பானர்ஜி

DIN

மேற்கு வங்கம் எப்போதும் மனிதநேயம், ஒற்றுமை மற்றும் நேர்மை ஆகியவற்றுக்காக போராடும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

28வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவினை தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

கொல்கத்தாவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த விழாவில் மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்குவங்கம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. மேற்குவங்கம் ஒற்றுமை, மனிதநேயம், பன்முகத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றுக்காக போராடியுள்ளது. அந்தப் போராட்டம் இனியும் தொடரும். எங்களது மாநிலம் யாருக்கும் தலை வணங்காது. அதேபோல மேற்குவங்கம் யாரிடமும் கையேந்தாது. ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சிப் பணிகள் போன்றவைகளுக்கு நிதியளிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்திய மற்றும் உலக சினிமாவுக்கு தனது மகத்தான பங்களிப்பை அளித்துள்ள சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT