இந்தியா

புவி வெப்பமயமாதல் குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம்!

DIN

புவி வெப்பமயமாதல் குறித்து விவாதக்க மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, பிரமோத் திவாரி உள்ளிட்டோரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

சீன - இந்திய எல்லைப் பிரச்னையில் விவாதம் நடத்தக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த 2 நாள்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து விவாதிக்கக் கோரி திமுக எம்பி திருச்சி சிவா, காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி, கம்யூனிஸ்ட் எம்பி பி. சந்தோஷ் குமார் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

இவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, இன்று பிற்பகலில் புவி வெப்பமடைதலால் ஏற்படும் தீவிர விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிகளவு மழை, கடுமையான வெயில் என இயற்கையில் பல்வேறு மாற்றங்களும், இயற்கை பேரிடர்களும் நிகழ்ந்து வருகின்றது.

உலக நாடுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மாநிலங்களவை விவாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT