இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (சியுஇடி) மே 21 முதல் 31 வரை நடைபெறுகின்றன.
பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகின்றன.
வேளாண் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (ஏஐஇஇஏ) ஏப்ரல் 26 முதல் 29 தேதி வரை நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | 100-வது நாள் நடைப்பயணத்தில் ராகுல் காந்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.