திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம் 
இந்தியா

பிகாரில் பரபரப்பு... ரூ.13 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்தது!

பிகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்தது பிகார் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பெகுசாய்: பிகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்தது பிகார் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளமுள்ள பாலம் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு பாலத்திற்கான கட்டுமானப் பணி தொடங்கி, 2017 இல் முடிவடைந்தது. ஆனால், முதல்வரின் நபார்டு வங்கித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலம், அணுகுசாலை இல்லாததால் பாலம் திறக்கப்படாமல் இருந்து வந்தது. 

சமீபத்தில் பாலத்தின் முன்பகுதியில் விரிசல் காணப்பட்டது, அதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பாலத்தின் முன்பகுதி இடிந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சாஹேப்பூர் கமால் காவல் நிலையப் பகுதியின் அஹோக் கந்தக் காட் பகுதியிலிருந்து ஆக்ரிதி தோலா சௌகி மற்றும் பிஷன்பூர் இடையே பாலம் கட்டப்பட்டது.

முதல்வரின் நபார்டு வங்கித் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்து விழுந்தது பிகார் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடி இந்தியாவின் விற்பனை 18% சரிவு!

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கீதம்! விடியோ வைரல்!

வெள்ளை மனம்... மேகா!

உருகும் அழகில்... ப்ரீத்தி!

தென்நாடு பாடல்!

SCROLL FOR NEXT