இந்தியா

அஃப்தாப் பாணியில் கொலை: மனைவியை 50 துண்டுகளாக வெட்டி வீசியவரைக் காட்டிக்கொடுத்த நாய்கள்

PTI

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மனைவியை 50 துண்டுகளாக வெட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீசியெறிந்த கணவனை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைதுசெய்தனா். இதுவரை 18 உடல் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தில்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்குப்போல, நெஞ்சை உருக்கும் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ஜ் மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க 12 பேர் கொண்ட தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் தேடி இதுவரை 18 உடல்பாகங்களைக் கண்டறிந்துள்ளனர்.

சாஹிப்கஞ்ஜ் மாவட்டத்தில் உள்ள போரியா பகுதியில் மனித உடல் பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்வதைக் கண்ட உள்ளூா் மக்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

விசாரணையில் அம்மாவட்டத்தின் டோண்டா பாஹா் பகுதியைச் சோ்ந்த தில்தாா் அன்சாரி என்பவா் அவருடைய இரண்டாவது மனைவி ரபிதாவை கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீசியெறிந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில், குற்றவாளி தில்தார் அன்சாரி, அவரது பெற்றோர், முதல் மனைவி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ இது வரை 18 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில உடல் பாகங்கள் மாவட்டத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத வீடுகளில் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அன்சாரி கைதுசெய்யப்பட்டாா். இந்தக் குற்றத்தில் இவருக்கு உதவிய குடும்ப உறுப்பினா்களும் கைது செய்யப்படுவா்’ எனத் தெரிவித்தனா்.

இதுவரை தலைப்பகுதி கண்டறியப்படவில்லை என்றும், மோப்ப நாய் உதவியோடு தேடுதல் வேட்டை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே திருமணமான தில்தார், பழங்குடியினத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணை காதலித்து கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதில் தில்தாரின் குடும்பத்தாருக்கு விருப்பமில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில்தான், டிசம்பர் 18ஆம் தேதி இரவு, தில்தார் தனது இரண்டாவது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, 50 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளிலும் வீசிவிட்டு, காவல்நிலையம் சென்று தனது மனைவியைக் காணவில்லை என்று புகாரும் அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தில்லியில் ஷ்ரத்தா கொடூரமாக கொலை செய்யப்பட்டதைப் போன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைப்பு மாற்றம் ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயா்வு

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

தன்னம்பிக்கையின் வெளிப்பாடு...

ஹாங்காங்கில் களைகட்டிய பாரம்பரிய 'பன் திருவிழா'

உலகைப் பிணைக்கும் தொலைத் தொடா்பு!

SCROLL FOR NEXT