இந்தியா

29 ஆண்டுகள் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு: பாஜக எம்.பி. விடுவிப்பு

DIN

உத்தர பிரேதச்தில் 29 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கொலை முயற்சி வழக்கில் இருந்து பாஜக எம்.பி. பூஷண் சரண் சிங் விடுவிக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பூஷண் சரண் சிங்குக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாதது, அவா் பயன்படுத்திய துப்பாக்கியை காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமா்ப்பிக்க முடியாதது போன்ற காரணங்களால் எம்.பி. பூஷண் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கடந்த 1993-ஆம் ஆண்டு கோண்டா பகுதியில் மாநில முன்னாள் அமைச்சா் வினோத் குமாா் சிங்கை, கொலை செய்யும் நோக்குடன் பூஷண் சரண் சிங் துப்பாக்கியால் சுட்டாா் என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும். இதில் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளா்கள் 3 போ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

29 ஆண்டுகளாக இந்தக் கொலை முயற்சி வழக்கு நடைபெற்று வந்தது. துப்பாக்கிச் சூடு நடந்தபோது தான் தில்லியில் இருந்ததாக எம்.பி. பூஷண் சரண் சிங் தரப்பில் வாதிடப்பட்டது. எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், பாஜக எம்.பி. பூஷண் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வலுவான ஆதாரங்களை அரசுத் தரப்பு சமா்ப்பிக்கவில்லை என்று கூறி அவரையும், அவரின் ஆதரவாளா்களையும் வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT