கோப்புப்படம் 
இந்தியா

ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் திட்டம் 2026-ல் நிறைவு பெறும்: மத்திய அரசு

6,000 மீட்டர் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் 2026-ல் நிறைவு பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

6,000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் 2026-ல் நிறைவு பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமுத்ராயன் திட்டத்திற்கான வாகனங்களை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சமுத்ரயான் திட்டமானது, ஆழ் கடலுக்குள் இருக்கும் இதுவரை வெளிஉலகுக்குத் தெரியாததை வெளிக்கொணர, மனிதர்களுடன் கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள நீரில் மூழ்கக்கூடிய வாகனத்தை அனுப்புகிறது.

இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி, கடலுக்கு அடியில் என்னயிருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்த இந்த சமுத்ரயான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடலுக்குள் என்னயிருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய உதவும்  தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் உணர்திறன் தன்மை கொண்ட கருவிகளுடன் மூன்று பேர் கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழத்துக்குள் சென்று ஆய்வு நடத்துவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT