ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்தில் அவதார் 2 திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் பலியானார்.
ஆந்திரத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரம் நகரில் அவதார் 2 படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சுமி ரெட்டி ஸ்ரீனு என்பவர் என்பவர் தனது சகோதரர் ராஜுவுடன் திரையங்கில் அவதார் 2 பார்த்துக் கொண்டிருந்த போது, ஸ்ரீனு மயங்கி விழுந்தார். அவரது சகோதரர் உடனடியாக அவரை அருகில் உள்ள பெத்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர், மருத்துவமனையில் ஸ்ரீனுவை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். உயிரிழந்த லட்சுமி ரெட்டி ஸ்ரீனுவுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.