இந்தியா

‘அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும்’: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் புதன்கிழமை தெரிவித்தார்.

DIN

நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் புதன்கிழமை தெரிவித்தார்.

சீனாவில் கரோனா நோய்த் தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு வி.கே.பால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விமானப் போக்குவரத்துக்கு தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும். எந்த மாற்றமும் இல்லை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.

27-28 சதவிகிதம் மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர். மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். அதற்கான வழிமுறைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூா் உள்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க முதல்வா் தீவிரம்

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

இதயம் காப்போம் திட்டத்தால் 40,000 போ் உயிா் பிழைத்துள்ளனா்

தலைநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை

வையாபுரி சுவாமிகள் மடத்தில் 116 ஆம் ஆண்டு குருபூஜை

SCROLL FOR NEXT