படம்: டிவிட்டர் 
இந்தியா

கடும் பனிமூட்டம்: சவாலுக்கு மத்தியில் எல்லைப் பாதுகாப்புப் படை!

இந்திய எல்லைகளில் சூழ்ந்திருக்கும் கடும் பனிமூட்டம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.

DIN

இந்திய எல்லைகளில் சூழ்ந்திருக்கும் கடும் பனிமூட்டம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த ஆண்டு குளிர்காலத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. காலை நேரங்களில் சாலைகளில் பனிமூட்டம் சூழ்வதால் பல்வேறு  நெடுஞ்சாலைகளில் கோர விபத்துகள் நிகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில், இந்திய - பாகிஸ்தான், இந்திய - சீன எல்லைகளில் கடுமையான பனிமூட்டமும், குளிரும் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த சூழலை பயன்படுத்தி பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து டிரோன்கள் மூலம் போதைப் பொருள்களை அனுப்பும் செயல் அதிகரித்துள்ளது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கடந்த சில நாள்களில் அதிகளவிலான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டரி-வாகா எல்லையில் 10 மீட்டர் தொலைவில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலை பயன்படுத்தி எல்லை தாண்டி தீவிரவாதிகள் ஊடுருவ அதிக வாய்ப்பிருப்பதால் ரோந்து பணிகளை எல்லை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்தம் தேடும் நகரம் !

தொடரும் மரண தண்டனை சர்ச்சை...

இன்று பாராட்டு பெறப்போகும் ராசி எது? தினப்பலன்கள்!

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பிப். 18-இல் தாக்கல்

திருப்போரூா் கந்தசாமி கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT