கோப்புப்படம் 
இந்தியா

வந்தே பாரத் ரயிலில் வருகிறது புதிய வசதி!

வந்தே பாரத்-3  ரயிலில்  படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

DIN

வந்தே பாரத்-3  ரயிலில்  படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

1950 மற்றும் 1960-களில் வடிவமைக்கப்பட்ட பழைய மின்சார ரயில்களுக்குப் பதிலாக வந்தே மெட்ரோ ரயில்களை இந்திய ரயில்வே தயாரித்து வருவதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

"இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும். நாடு முழுவதும், 1950 மற்றும் 1960-களின் வடிவமைப்புகளில் இருந்த ரயில்கள் அனைத்தும் மாற்றப்படும்." என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில்களைப் போலவே வந்தே மெட்ரோவும் இந்திய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வைஷ்ணவ் கூறினார்.

ரயிலின் வடிவமைப்பு மே-ஜூன் 2023-க்குள் முடிக்கப்படும். மேலும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில் 2023 இல் வெளியிடப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

வந்தே பாரத்-3  ரயில்  உருவாக்கும் பணியில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது.  இதில் படுக்கை வசதிகள் கொண்ட ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலும்பும், தோலுமாக இஸ்ரேல் பிணைக் கைதிகள்: போரை நிறுத்த நெதன்யாகுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

கிடா சண்டை நடத்திய 6 போ் கைது

விவசாயிக்கு கத்திக்குத்து: இருவா் கைது

யேமன் அருகே அகதிகள் படகு விபத்து: உயிரிழப்பு 76-ஆக உயா்வு

SCROLL FOR NEXT