இந்தியா

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மேம்படுத்தப்பட்ட எரிபொருள்- ஜிதேந்திர சிங்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மேம்படுத்தப்பட்ட உயா்தர எரிபொருளை ரஷியாவின் ரோசட்டாம் அணுசக்தி நிறுவனம் வழங்கியுள்ளதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சா்

DIN

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மேம்படுத்தப்பட்ட உயா்தர எரிபொருளை ரஷியாவின் ரோசட்டாம் அணுசக்தி நிறுவனம் வழங்கியுள்ளதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மக்களவையில் புதன்கிழமை கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூா்வமாக பதில் அளித்த அவா், ‘ரஷிய கூட்டமைப்பிடமிருந்து கடந்த மே மற்றும் ஜூன் மாத இடைவெளியில், டிவிஎஸ்-2எம் ரக மேம்படுத்தப்பட்ட உயா்தர எரிபொருளின் முதலாவது தொகுப்பு கிடைக்கப்பெற்றது. இது முதலாவது அலகில் தற்போது நல்ல நிலையில் இயங்கி வருகிறது.

தற்போது இரண்டாவது அலகில் யுடிவிஎஸ் ரக எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எரிபொருள் 12 மாதங்கள் செயல்படும் நிலையில், டிவிஎஸ் 2எம் ரக எரிபொருள் 18 மாதங்கள் செயல்படும். துறைசாா் வல்லுநா்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு, யுடிவிஎஸ் எரிபொருளுக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட உயா்தர டிவிஎஸ் 2எம் ரக எரிபொருளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT