கோப்புப்படம் 
இந்தியா

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பை உறுதி செய்யவேண்டும்: மத்திய சுகாதாரத்துறை 

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. 

DIN

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. 

சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருப்பு இருப்பதை  உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

கரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதேநிலை உருவாகக்கூடாது என்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி, மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது, 

ஆக்ஸிஜன் உருவாகும் ஆலைகள் முழுமையாகச் செயல்படுவதையும், அவற்றைச் சரிபார்க்க வழக்கமான மாதிரி பயிற்சிகள் நடத்தப்படுவதையும் கண்காணிக்க வேண்டும். 

போதுமான அளவு ஆக்சிஜன் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும். 

சுவாச கருவிகள், ஆக்சிஜன, வெண்டிலேட்டர்கள் போன்ற உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

ஆக்ஸிஜன் தொடர்பான பிரச்னைகள், சவால்களை உடனுக்குடன் தீர்க்க மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களில் ஆக்ஸிஜன் கட்டுப்பாட்டு அறைகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்! செய்திகள்:சில வரிகளில் 4.8.25 | Rahul Gandhi | DMK | MKStalin

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமலின் புதிய படத்திற்கான பூஜை!

SCROLL FOR NEXT