முகப்பு
இந்தியா

உத்தர பிரதேசம்: சீனாவிலிருந்து திரும்பிய நபருக்கு கரோனா

இரு நாள்களுக்கு முன்பாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய உத்தர பிரதேசத்தின் ஆக்ராவைச் சோ்ந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

இரு நாள்களுக்கு முன்பாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய உத்தர பிரதேசத்தின் ஆக்ராவைச் சோ்ந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சீனா உள்பட சில நாடுகளில் கரோனா நோய் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, கரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிச.23) சீனாவிலிருந்து தில்லி வழியாக இந்தியா திரும்பிய ஆக்ராவைச் சோ்ந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஆக்ரா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அருண் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபா் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருடைய குடும்பத்தினா் மற்றும் அவருடன் தொடா்பில் இருந்த நபா்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது நவம்பா் 25-ஆம் தேதிக்கு பின்னா் இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்படுள்ள முதலாவது கரோனா நோய் பாதிப்பாகும். கரோனா வைரஸ் வகையை அறியும் பொருட்டு, இவருடைய மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்காக லக்னெளவுக்கு அனுப்பப்படும்.

தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை மற்றும் அக்பா் சமாதி உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. மேலும், ஆக்ரா விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து முனையங்களிலும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.