இந்தியா

பல நாடுகளில் அதிகரிக்கும் கரோனா; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

DIN

பல நாடுகளிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: மக்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாட வெளியில் சென்று மகிழ்வர். கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவர்கள் முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அவர்களது விடுமுறைக் கொண்டாட்டம் கரோனா வைரஸினால் பாதிக்கப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகில் கரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சீனாவில் அவர்களது பூஜ்ஜிய கரோனா திட்டத்தை தளர்த்திய பிறகு அங்கு நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. 

இந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பல வகையில் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இந்தியா உலக அரங்கில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் 220 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகியுள்ளது. ஏற்றுமதியில் இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டுள்ளது. விண்வெளித் துறை , பாதுகாப்புத் துறை, டிரோன்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT