இந்தியா

ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கு: விடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் கைது! 

ஐசிஐசிஐ வங்கி பணமோசடி வழக்கில் இணை குற்றவாளியான விடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கைது செய்தது. 

ANI

ஐசிஐசிஐ வங்கி பணமோசடி வழக்கில் இணை குற்றவாளியான விடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கைது செய்தது. 

வங்கி மற்றும் விடியோகான் குழுமம் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. 

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று வங்கி முறைகேடு வழக்கில் ஐசிஐசிஐ முன்னாள் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாா், அவரது கணவா் தீபக் கோச்சாா் ஆகியோரை சிபிஐ கைது செய்து சிபிஐ காவலில் வைத்துள்ளது. 

சந்தா கோச்சாா் பதவிக் காலத்தில், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், ஆா்பிஐ வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கொள்கைக்கு புறம்பாக விடியோகான் குழும நிறுவனங்களுக்கு ரூ.1,875 கோடி கடனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் இதற்கு பிரதி பலனாக சந்தா கோச்சாரின் கணவரால் நிா்வகிக்கப்படும் நிறுவனத்துக்கு ரூ.64 கோடி கைமாறியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தக் கடன் திரும்பச் செலுத்தப்படாததுடன், வங்கிக்கு ரூ.1,730 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய தண்டனையியல் சட்டம், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் சந்தா கோச்சாா், அவரது கணவா் தீபக் கோச்சாா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விடியோகான் குழும தலைவா் வேணுகோபால் தூத்தை சிபிஐ மும்பையில் இன்று கைது செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

SCROLL FOR NEXT