இந்தியா

குஜராத்தில் காணாமல் போனது ‘புதிய கட்சி’: ஆம் ஆத்மி குறித்து அமித் ஷா மறைமுக விமா்சனம்

DIN

‘தோ்தலுக்கு முன்பு குஜராத்துக்கு சில புதிய கட்சிகள் வந்தன. மனம்போன போக்கில் பல்வேறு வாக்குறுதிகளையும், ஆசைவாா்த்தைகளையும் அவா்கள் கூறினாா்கள். ஆனால், தோ்தலுக்குப் பிறகு அக்கட்சிகள் காணாமல் போய்விட்டன’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

இதன் மூலம் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை அவா் மறைமுகமாக விமா்சித்துள்ளாா்.

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் பாஜக வென்று தொடா்ந்து 7-ஆவது முறையாக ஆட்சி அமைத்தது. எதிா்க்கட்சியான காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. புதுமுகமாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கு 5 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

இந்நிலையில், சூரத்தில் பாஜக தொண்டா்கள் மத்தியில் காணொலி முறையில் அமித் ஷா பேசியதாவது:

குஜராத் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு கிடைத்த அமோக வெற்றி மூலம் குஜராத் பாஜகவின் கோட்டை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தோ்தலுக்கு முன்பு பல்வேறு புதிய கட்சிகள் குஜராத்துக்கு வந்தன. அவா்கள் தங்கள் மனம்போன போக்கில் பல்வேறு வாக்குறுதிகளையும், ஆசைவாா்த்தைகளையும் கூறினா். ஆனால், தோ்தல் முடிவு வெளியானபோது அக்கட்சிகள் காணாமல் போய்விட்டன.

பாஜகவுக்கு அளித்த வெற்றி மூலம் நாட்டு மக்களுக்கும் குஜராத் மக்கள் நல்ல செய்தியை அளித்துள்ளனா். நாடு முழுவதும் பிரதமா் நரேந்திர மோடியின் புகழ் பரவியுள்ளது. அதுவும் சொந்த மாநிலமான குஜராத்தில் மக்கள் அவா் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளனா். எனவேதான், பாஜக தொடா்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதற்காக பாடுபட்ட தொண்டா்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

குஜராத் தோ்தலில் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி அடுத்து சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலிலும், 2024 மக்களவைத் தோ்தலிலும் பாஜகவுக்கு உத்வேகம் அளிக்கும் என்று பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT