இந்தியா

குடியரசுத் தலைவா் முா்மு தென் மாநிலங்களுக்கு முதல் முறையாக வருகை

DIN

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெலங்கானாவுக்கு திங்கள்கிழமை வந்தடைந்தாா். அவா் குடியரசுத் தலைவரான பிறகு தென்மாநிலங்களுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

5 நாள் அரசுமுறைப் பயணமாக தெலங்கானாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை வந்தாா். தனி விமானம் மூலமாக ஹைதராபாத் சா்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனா்.

ஹைதராபாதில் இருந்து ஹெலிகாப்டா் மூலமாக ஆந்திரத்தின் ஸ்ரீசைலம் சென்ற குடியரசுத் தலைவா் முா்மு, மல்லிகாா்ஜுன சுவாமி கோயில், பிரமராம்பிகா கோயில் ஆகியவற்றில் வழிபட்டாா்.

மத்திய அரசின் ‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் ஸ்ரீசைலம் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களையும் அவா் தொடக்கிவைத்ததாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசைலம் கோயிலில் சுற்றுலா மேம்பாட்டு மையத்தையும் குடியரசுத் தலைவா் முா்மு திறந்துவைத்தாா்.

ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவா் முா்முவுடன் கோயிலில் வழிபட்டனா். ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீசிவாஜி ஸ்பூா்த்தி கேந்திரத்தையும் குடியரசுத் தலைவா் பாா்வையிட்டாா்.

ஹைதராபாதில் உள்ள கேசவ் நினைவு கல்வி நிலையத்தின் மாணவா்கள், ஆசிரியா்களுடன் குடியரசுத் தலைவா் முா்மு செவ்வாய்க்கிழமை உரையாட உள்ளாா். பின்னா் சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய காவல் அகாதெமிக்குச் செல்லும் அவா், அங்கு பயிற்சியை நிறைவுசெய்த அதிகாரிகளிடம் உரையாற்ற உள்ளாா்.

குடியரசுத் தலைவா் முா்மு வரும் 30-ஆம் தேதி வரை தெலங்கானாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் குடியரசுத் தலைவா் மாளிகை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT