மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தின் விலைப்பட்டியல் அறிவிப்பு! 
இந்தியா

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தின் விலைப்பட்டியல் அறிவிப்பு!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பூசி  மருந்துக்கான விலைப்பட்டியலை நிர்ணயித்துள்ளது. 

PTI

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பூசி  மருந்துக்கான விலைப்பட்டியலை நிர்ணயித்துள்ளது. 

கரோனாவுக்கு எதிரான போரில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாகச் செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான விலைப் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது. 

அதன்படி, தனியர் மருத்துவமனைகளில் ஒரு டோஸுக்கு ரூ.800 ஆக நிர்ணயித்துள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்க்கப்படும். இதுவே அரசு மருத்துவமனைகளில் ஒரு டோஸுக்கு ரூ.325 ஆகவும் நிர்ணயித்துள்ளது.

உலகில் முதன்முதலாக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் உருவாக்கியுள்ளது. அந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸாக இது போடப்படுகிறது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மூக்கு வழியாக தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொள்ளும் பயனாளிகள், அதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். தடுப்பு மருந்துக்கான விவரத்தை கோவின் வலைத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

பயனாளிகள் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மூக்கு வழியே செலுத்தும் கரோனா தடுப்பூசி 2023 ஐனவரி நான்காவது வாரத்திலிருந்து கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT