அஸ்ஸாமில் தொகுதி மறுவரையறை தொடக்கம்
அஸ்ஸாமில் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமில் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2001 மக்கள்தொகை அடிப்படையில் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றும் வரும் ஜனவரி 1 முதல் மறுவரையறை செய்யும் பணி முடிவும் வரையில் அந்த மாநிலத்தில் புதிய நிா்வாக பதவிகள் உருவாக்கப்படக் கூடாது என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடைசியாக 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டின்படி, 1976-இல் அஸ்ஸாமில் தொகுதி மறுவரையறை பணி நடைபெற்றது.
மத்திய சட்ட அமைச்சகம் கொண்டு வந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தற்போது தொகுதி மறுவரையறை பணிகள் நடைபெற உள்ளன.
இதற்கான உத்தரவை தோ்தல் ஆணையம் பிறப்பித்தது.
அஸ்ஸாம் பேரவையின் பதவிக்காலம் 2026, மே 20-ஆம் தேதி முடிவடைகிறது. அங்கு மொத்தம் 14 மக்களவை தொகுதிகளும், 126 பேரவைத் தொகுதிகளும், 7 மாநிலங்களவை எம்.பி. இடங்களும் உள்ளன.
அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூா், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2020-இல் பிறப்பித்த தொகுதி மறுவரையறை உத்தரவை பாதுகாப்பு காரணங்களுக்கு மத்திய அரசு ஒத்திவைத்திருந்தது.