முகப்பு
இந்தியா

கார் விபத்தில் சிக்கிய பிரதமர் மோடியின் சகோதரர்!

கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி கார் விபத்தில் சிக்கியதில் அவரது குடும்பத்தினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Updated On : 27 டிசம்பர், 2022 at 9:29 PM
பிரதமர் மோடியின் சகோதரரின் விபத்துக்குள்ளான கார்
பகிர்:

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி கார் விபத்தில் சிக்கியதில் அவரது குடும்பத்தினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிரஹலாத் மோடி, அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரனுடன் சொகுசுக் காரில் பந்திபுராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, பிற்பகல் 2 மணியளவில் அவர்கள் காரானது சாலையின் தடுப்பின்மீது மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்து நடந்த போது அவரது வாகனத்தை தொடர்ந்து பாதுகாப்பு வாகனம் சென்றுள்ளது.

மைசூரு எஸ்பி சீமா லட்கர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது: 

Advertisement

எஸ்யூவி காரான மெர்சிடிஸ்-பென்ஸில் மோடியின் குடும்பத்தினர் பயணம் செய்தனர். அப்போது ஓட்டுநர் காரை வேகமாக இயக்கவில்லை, எனினும் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதியதால் காரின் முன்பகுதி பலத்த சேதமானது. 

இதில் பிரஹலாத் மோடியின் பேரனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயங்களுடன் மைசூரு ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர் என்று மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மது தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.