இந்தியா

மியான்மர் சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா இல்லை: மருத்துவமனை தகவல்!

DIN

மியான்மாரைச் சேர்ந்த 11 சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா தொற்று இல்லை என்று சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மியான்மரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 சுற்றுலாப் பயணிகள் குழு தில்லிக்கு வந்தனர். அவர்களை ஐஜிஐ விமான நிலையத்தில் கரோனா சோதனை செய்ததில், அதில் ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதியானதையடுத்து, 11 பேரும் சப்தர்ஜங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். 

11 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில், அதில் கரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து. பதினொரு பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று மூத்த மருத்துவர் ஒருவர் கூறினார். 

சீனா உள்பட சில நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு சர்வதேச விமானத்திலும் வரும் 2 சதவீத பயணிகளுக்கு கரோனா பரிசோதனையை அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

மேலும், தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT