ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா இன்று அவசர ஆலோசனை!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவ்வப்போது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு லடாக்கிலும், 4 மணிக்கு ஜம்மு-காஷ்மீரிலும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெறும் இந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் இரு யூனியன் பிரதேச ஆளுநர்களும் கலந்துகொள்கின்றனர்.
மேலும் உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதுடன் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.