இந்தியா

இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடரும்: டாட குழுமத் தலைவர் சந்திரசேகரன் கணிப்பு

இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடரும் என்று டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

DIN


புதுதில்லி: இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடரும் என்று டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

டாடா குழுமத்தின் 9.35 லட்சம் ஊழியர்களுக்கு அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: 

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் எரிபொருள் நெருக்கடியால் பொருளாதார மந்தநிலையைத் தவிர்க்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டம், தற்போது புவிசார் அரசியில் சூழல் ஆகியவற்றுக்கு இடையே, அதிகரித்து வரும் நுகர்வு, நுகர்வோர் நம்பிக்கை மற்றும் முதலீடுகள் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.

மேலும், அடுத்த ஆண்டு முதல் பணவீக்கம் படிப்படியாகக் குறைவதைக் காண முடியும். இந்தியா வலுவான நிலையில் உள்ளது. நாட்டின் வேகமான வளர்ச்சி அடுத்த ஆண்டும் தொடரும். 

உலகளாவிய வளர்ச்சி குறைவு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், உலகளாவிய உற்பத்தியில் நம் நாட்டின் பங்கு உயரும்போது, அது பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்று நோய்களின் பரவல் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பொருளாதார வளர்ச்சி 2000-களில் இருந்ததை விட அடுத்து ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார். 

டாடா குழுமத்தை பொறுத்தவரை, இந்த ஆண்டு நிகழ்வுகளின் ஆண்டாகும். இந்த ஆண்டும் பல அபிவிருத்திகளை நாம் கண்டுள்ளோம். “ஏர் இந்தியா” திரும்பப் பெறப்பட்டது, “டாடா நியு” அறிமுகப்படுத்தப்பட்டது, “டாடா மோட்டார்ஸ்” பயணிகள் வாகனங்களின் விற்பனை ஓராண்டில் 5 லட்சத்தைத் தாண்டியது, மின்சார கார்களின் பங்களிப்பு 10 சதவீதம் என அபிவிருத்திகளை கண்டுள்ளோம் என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT