முகப்பு
இந்தியா

ஜம்மு- காஷ்மீரில் அமைதியைக் கெடுக்கராகுல் முயற்சி: மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

ஜம்மு- காஷ்மீரில் நிலவும் அமைதியான சூழலைக் கெடுக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முயற்சி செய்கிறாா் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குா் குற்றம்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:13 AM
பகிர்:

ஜம்மு- காஷ்மீரில் நிலவும் அமைதியான சூழலைக் கெடுக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முயற்சி செய்கிறாா் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குா் குற்றம்சாட்டினாா்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் தேச ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு- காஷ்மீரில் அடுத்த மாதம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா், ஜம்மு காஷ்மீருக்கு கடந்த ஓராண்டில் 1.6 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா். அங்கு எந்தப் பகுதிக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம்.

ஜம்மு -காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அங்கு யாா் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்றலாம். தற்போது அங்கு கற்கள் வீசப்படும் சம்பவங்களும் நடைபெறுவதில்லை.

இந்தச் சூழலைக் கெடுக்கவே ராகுல் ஜம்மு- காஷ்மீருக்கு செல்கிறாா். ஸ்ரீநகா், லால்செளக்கில் 1992-இல் அப்போதைய பாஜக தலைவா் முரளி மனோகா் ஜோஷி, நரேந்திர மோடி ஆகியோா் ஏக்தா யாத்திரை மேற்கொண்டு தேசியக் கொடியை ஏற்றினா். அப்போது அங்கு காங்கிரஸ் அரசு இருந்ததால் பயங்கரவாத, துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடைபெற்றன. தற்போது பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உள்ளதால் காஷ்மீா் பகுதியில் பாதுகாப்பு நிலைமை முன்னேறியுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →