மகளை பள்ளிக்கு அனுப்பியதால் பெற்றோருக்கு நேர்ந்த துயரம் 
இந்தியா

வார்த்தையை சரியாக உச்சரிக்காதது குற்றமா? 5 வயது சிறுமியின் கையை முறித்த ஆசிரியர்! 

மத்தியப் பிரதேசத்தின், போபாலில்  டியூஷன் படிக்கும் 5 வயது சிறுமி வார்த்தையை சரியாக உச்சரிக்காத குற்றத்திற்காக சிறுமியின் கையை முறித்துள்ளார் ஆசிரியர் ஒருவர். 

PTI

மத்தியப் பிரதேசத்தின், போபாலில்  டியூஷன் படிக்கும் 5 வயது சிறுமி வார்த்தையை சரியாக உச்சரிக்காத குற்றத்திற்காக சிறுமியின் கையை முறித்துள்ளார் ஆசிரியர் ஒருவர். 

போபாலில் ஹபீப்கஞ்சில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. 
சிறுமியின் பெற்றோர், ஹபீப்கஞ்சில் உள்ள வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஆசிரியரிடம் பள்ளி நுழைவுத் தேர்வுக்குத் தயார்படுத்துவதற்காக சிறப்பு வகுப்புக்கு(டியூஷன்) அனுப்பியுள்ளனர். 

ஆசிரியர் வழக்கம் போல் பாடம் எடுக்கையில், சிறுமியிடம் "பெரட்" என்று வார்த்தையின் உச்சரிப்பைக் கேட்டுள்ளார். சிறுமி சரியாக உச்சரிக்காததால் கையை முறுக்கி, கண்ணத்தில் பளீரென அறைந்துள்ளார். இதனால் சிறுமிக்கு வலி அதிகமாக ஏற்பட்டுக் கதறியுள்ளார். 

இதையடுத்து, பெற்றோரிடம் கூறிய சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசென்றபோது, சிறுமியை எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. சிறுமிக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டது. 

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT