இந்தியா

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை: நிதிஷ் குமார்

DIN

2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிப்பதில் தனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களிடம் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது: பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதில்லை. பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கத் தயாராக உள்ளேன். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதில் எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றார்.

முன்னதாக, வரும் மக்களவைத் தோ்தலில் ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளின் முகமாகவும் ஒருமித்த பிரதமா் வேட்பாளராகவும் ராகுல் காந்தி திகழ்வாா் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல் நாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT