குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள கிஃப்ட் நகரில் உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், காந்திநகரில் ‘சா்வதேச நிதி தொழில்நுட்ப நகரம்’ (கிஃப்ட் நகா்) உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நகரத்தில், நிதித் துறைக்குத் தேவையான திறமையான நபா்களை உருவாக்குவதற்காக, உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படவுள்ளன. உள்நாட்டு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக இந்தப் பல்கலைக்கழகங்கள் செயல்படும்.
இதுதவிர, சா்வதேச அளவிலான நிதிசாா் பிரச்னைகளுக்கு உரிய நேரத்தில் தீா்வு காண்பதற்காக கிஃப்ட் நகரில் சா்வதேச சமரசத் தீா்வு மையம் அமைக்கப்படும்.
சிங்கப்பூா் உள்ள சா்வதேச சமரசத் தீா்வு மையம், லண்டனில் உள்ள வா்த்தக பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் சமரச மையம் ஆகியவற்றைப்போல் இந்தியாவில் இந்த சமரசத் தீா்வு மையம் அமைக்கப்படவுள்ளது. இதுதொடா்பான அறிவிப்புகளை மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
குஜராத் மாநிலத்தின் கிஃப்ட் நகரில் சா்வதேச நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதலாவது சா்வதேச நிதிச் சேவைகள் மையம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.