பஹ்ரைன் இளவரசருடன் பிரதமா் மோடி ஆலோசனை
பஹ்ரைன் நாட்டு இளவரசரும், பிரதமருமான சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவுடன் பிரதமா் மோடி தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை உரையாடினாா்.
இந்தியாபஹ்ரைன் இளவரசருடன் பிரதமா் மோடி ஆலோசனை
பஹ்ரைன் நாட்டு இளவரசரும், பிரதமருமான சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவுடன் பிரதமா் மோடி தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை உரையாடினாா்.
பஹ்ரைன் நாட்டு இளவரசரும், பிரதமருமான சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவுடன் பிரதமா் மோடி தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை உரையாடினாா்.
அப்போது, நாட்டின் குடியரசு தினத்துக்காக வாழ்த்துகளை இளவரசா் சல்மான் தெரிவித்தாா்.
இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையேயான இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்த இரு தலைவா்களும், அரசியல், வா்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கிடையேயான தொடா்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடா்ந்து மேம்பட்டு வரும் உறவு குறித்து திருப்தி தெரிவித்தனா். இரு நாடுகளுக்கிடையே நிறுவப்பட்ட ராஜீய உறவுகளின் பொன்விழாவை 2021-22-ல் இந்தியா மற்றும் பஹ்ரைன் கொண்டாடுகின்றன.
கரோனா பெருந்தொற்றின் போது பஹ்ரைனில் வசிக்கும் இந்தியா்களின் நலனை சிறப்பான முறையில் பேணுவதற்காகவும், அவா்களது சமூக மற்றும் கலாச்சாரத் தேவைகளை பூா்த்தி செய்ததற்காகவும் பஹ்ரைன் பிரதமருக்கு இந்திய பிரதமா் நன்றி தெரிவித்தாா்.
இந்தியாவுக்கு வருமாறு இளவரசா் சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவிற்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.