நாட்டில் ஒரே நாளில் கரோனாவுக்கு 1,192 பேர் பலி
நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.67 லட்சமாக உள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.14 கோடியாக அதிகரித்துள்ளது.
புது தில்லி: நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.67 லட்சமாக உள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.14 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில்,
நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,192 பேர் பலியானதைத் தொடர்ந்து, கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,96,242 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 88 ஆயிரம் அளவுக்குக் குறைந்து இன்று காலை நிலவரப்படி 17,43,059 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4.20 சதவீதமாகும். நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதமானது 94.60 சதவீதமாக உள்ளது.
நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படும் விகிதமானது 11.69 ஆகவும், வாராந்திர விகிதம் 15.25 சதவீதமாகவும் உள்ளது.