ஹரியாணாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத்தில் உள்ள ஹுடா சந்தையில் உள்ள கழிவுநீர் தொட்டியை 2 தொழிலாளர்கள் நேற்று சுத்தம் செய்தனர். அப்போது இருவரும் விஷவாயு தாக்கி பலியானார்கள்.
இதையும் படிக்க- முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: ராகுல் காந்தி
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிகே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த தொழிலாளர்கள் பல்பீர் (50), பிரதீப் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.