முகப்பு
இந்தியா

கேரள அரசிற்குத் தன் நிலத்தை இலவசமாகக் கொடுத்த அடூர் கோபாலகிருஷ்ணன்

கேரளத்தின் புகழ்பெற்ற இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன் தனக்குச் சொந்தமான இடத்தை அரசின் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்திற்கு இலவசமாக தர முன்வந்துள்ளார்.

Updated On : 3 பிப்ரவரி 2022, 6:43 pm IST
அடூர் கோபாலகிருஷ்ணன்
பகிர்:

கேரளத்தின் புகழ்பெற்ற இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன் தனக்குச் சொந்தமான இடத்தை அரசின் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்திற்கு இலவசமாக தர முன்வந்துள்ளார்.

'சுவயம்வரம்’ 'எலி பத்தாயம்’ ‘நாலு பெண்ணுகள்’ உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி 16 தேசிய விருதுகள், 18 கேரள மாநில விருதுகள், 2004-ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே போன்ற பல விருதுகளைப் பெற்றவர் அடூர் கோபாலகிருஷ்ணன்(80).

தற்போது, கேரளத்தின் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் நீண்ட நாள் கனவுத் திட்டமான  வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்திற்கு தன் ஊரான  அடூரில்  உள்ள 13 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்குவதாக மாநில உள்துறை அமைச்சர் கோவிந்தனிடம் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதனால், அடூரின் இச்செயலை சமூக வலைவளங்களில் பலர் பாராட்டி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.