முகப்பு
கேரள முதல்வர் பினராயி விஜயன் அமீரக பிரதமரும் துணை அதிபருமான ஷேக் முகமது ஆகியோருக்கிடையே நடைபெற்ற சந்திப்பு
இந்தியா

மலையாளத்தில் ட்வீட் செய்த அமீரகப் பிரதமர்; அரபு மொழியில் பதிலளித்த கேரள முதல்வர்

கேரள வளர்ச்சியில் ஆதரவளித்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூமுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
கேரள முதல்வர் பினராயி விஜயன் அமீரக பிரதமரும் துணை அதிபருமான ஷேக் முகமது ஆகியோருக்கிடையே நடைபெற்ற சந்திப்பு
பகிர்:

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் அந்நாட்டு பிரதமரும் துணை அதிபருமான ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூமை சந்தித்து பேசினார். பின்னர், ஷேக் முகமது பின் இந்த சந்திப்பு குறித்து மலையாளத்தில் ட்வீட் செய்திருந்தார்.

இதை, ஐக்கிய அரபு அமீரத்தில் வாழ்ந்து வரும் மலையாள மக்கள் ட்ரெண்ட் செய்ய, இப்பதிவு வைரலானது. புதன்கிழமையன்று நடைபெற்ற துபாய் கண்காட்சியில் விஜயனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு அடங்கிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்தார். 

இந்த பதிவுக்கு பினராயி விஜயன் அரபு மொழியிலேயே ட்விட்டரில் பதில் அளித்தார். 

முன்னதாக, ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூ தனது ட்விட்டர் பக்கத்தில் "ஐக்கிய அரபு அமீரகம் கேரளத்துடன் சிறப்பான உறவைப் பகிர்ந்து கொள்கிறது. துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார மற்றும் வளர்ச்சியில் கேரள மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்" என மலையாளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு அரபு மொழியில் நன்றி தெரிவித்த பினராயி, "உங்கள் விருந்தோம்பல் மற்றும் அன்பான வரவேற்பால் பணிவுடன் ஏற்று கொள்கிறேன். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபாய் உடனான தொடர்பை மேலும் வலுப்படுத்த அரசு விரும்புகிறது" என ட்விட்டரில் பதிவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →