இந்தியா

நீட் விலக்கு மசோதா: மாநிலங்களவையில் திமுக நோட்டீஸ்

நீட் விலக்கு மசோதா குறித்து விவாதம் நடத்தக்கோரி மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

DIN

நீட் விலக்கு மசோதா குறித்து விவாதம் நடத்தக்கோரி மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

மாநிலங்களவை செயலரிடம் திமுக எம்.பி. திருச்சி சிவா இந்த ஒத்திவைப்பு நோட்டீஸை வழங்கியுள்ளார். மாநிலங்களவை அலுவல் நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியிறுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. 

பின்னர் அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசிற்கே ஆளுநர் ஆர்.என் ரவி திருப்பி அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT