அகிலேஷ் யாதவ் (கோப்புப்படம்) 
இந்தியா

கடைசி நிமிடத்தில் கூட்டணி பிரச்னை; சவாலை சமாளிப்பாரா அகிலேஷ்?

பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் அப்னா தளத்திலிருந்து பிரிந்துவந்த அப்னா தளம் (கமரவாடி) கட்சியை கிருஷ்ணா படேல் நடத்திவருகிறார்.

DIN

உத்தரப் பிரதேச தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணியில் முக்கிய கட்சியாக கருதப்படும் அப்னா தளத்தால் (கமரவாடி) சிக்கல் நிலவிவருகிறது. கூட்டணியில் தொடருமா அல்லது வெளியேறுமா என்பது இன்று அகிலேஷ் யாதவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் தெரியவரும்.

பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியாக அனுப்பிரியா படேலின் அப்னா தளம் விளங்குகிறது. இதிலிருந்து பிரிந்துவந்த அனுப்பிரியாவின் தாயார் கிருஷ்ணா படேல் அப்னா தளம் (கமரவாடி) என்ற கட்சியை நடத்திவருகிறார்.

வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தேர்தல் தொடங்கப்படவுள்ள நிலையில், சமாஜ்வாதி, அப்னா தளம் (கமரவாடி) ஆகிய கட்சிகளுக்கு இடையேயான உறவில் விரிசல் நீண்டு கொண்டே செல்கிறது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகு, கூட்டணி குறித்து முடிவு வெளியிடப்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மெளரியா போட்டியிடும் சிரத்து தொகுதியில், சமாஜ்வாதி சார்பாக பல்லவி படேல் களமிறங்கியுள்ளார். இந்த அறிவிப்பு உள்ளூர் தலைவர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஏனெனில், சமாஜ்வாதி சின்னத்தில் போட்டியிடவுள்ளரா அல்லது அவரது சொந்த கட்சியின் சின்னத்தில் போட்டியவுள்ளாரா என்பது குறித்து அகிலேஷ் விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல்லவி படேல் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, துணை முதல்வருக்கு எதிராக போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை என்றும் அரசியல் வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது. சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணியில், அப்னா தளம் (கமரவாடி) கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

அபூர்வம்...

ஆரோவில் உருவானது எப்படி?

முதல்நாளில் ரூ.13 கோடி, 2-ஆம் நாளில் ரூ.50 கோடி! வசூலில் முன்னேறும் மதராஸி!

லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

SCROLL FOR NEXT