இந்தியா

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்: மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். 

DIN

புதிதில்லி: நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். 

நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி, நேற்று சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவுக்கு மீண்டும் அனுப்பி வைத்தாா்.

நீட் விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பி வைத்து, அதற்காக ஆளுநா் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இந்நிலையில், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் ஆளுநரின் செயல் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். 

மேலும் ஒரு மாநில சட்டப்பேரவை அனுப்ப கூடிய மசோதாவை ஒரு ஆளுநர் எப்படி திருப்பி அனுப்ப முடியும் என கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, இதுதொடர்பாக விவாதம் நடத்தக் கோரி நோட்டீஸ் அளித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, கேள்வி நேரத்தின் போது பேச முடியாது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் மீது பேசுங்கள் என கூறியதுடன் கேள்விநேரம் தேவையில்லை என்றாலும் பரவாயில்லை, திமுக கோரிக்கையை விவாதிக்க முடியாது என நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

SCROLL FOR NEXT