முகப்பு
இந்தியா

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானச் சேவை நேரம் மாற்றம்

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, வெள்ளிக்கிழமை முதல், வார இறுதி நாள்களில் மாலை 5 மணிக்கு மேல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
கோப்புப்படம்
பகிர்:


ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, வெள்ளிக்கிழமை முதல், வார இறுதி நாள்களில் மாலை 5 மணிக்கு மேல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் ஓடுபாதை முழுக்க, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் அனைத்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை 5 மணி முதல் 6 மணி வரை விமான நிலைய ஓடுபாதை சீரமைப்புப் பணி நடைபெறும். இரவு நேரத்தில் மிகக் குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்படும் என்பதால் அந்த நேரத்தைத் தேர்வு செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 5 மணிக்கு மேல் விமானங்கள் புறப்படவும் தரையிறங்கவும் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →