இந்தியா

34 லட்சம் சிறார்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது: மன்சுக் மாண்டவியா

DIN

நாடு முழுவதும் இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், 

உலகளவில் அதிகபட்சமாக இந்தியா முழுவதும் 168.47 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் இதுவரை 65 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் முதல் தவணை செலுத்திய 28 நாள்களில் இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்கள் ஆவர். ஜனவரி 3ஆம் தேதி முதல் தவணை செலுத்தியவர்கள் ஜனவரி 31ஆம் தேதி இரண்டாம் தவணை செலுத்தத் தகுதியானவர்கள்.

இந்நிலையில், இதுவரை 34.90 லட்சம் சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 55,58,760 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி மொத்தம் 1,68,47,16,068 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT