ஹைதராபாத் வந்த பிரதமர் மோடி: வரவேற்க வராத தெலங்கானா முதல்வர்
அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத் வந்தார். ஆனால், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், பிரதமரை வரவேற்க வராமல் தவிர்த்துவிட்டார்.
ஹைதராபாத்: அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத் வந்தார். ஆனால், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், பிரதமரை வரவேற்க வராமல் தவிர்த்துவிட்டார்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலாசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இவர்களுடன், தெலங்கான முதன்மைச் செயலாளர் சோமேஷ் குமார், காவல்துறை டிஜிபி எம். மஹேந்தர் ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பிரதமரை வரவேற்றனர்.
எப்போதும், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக தாக்கிப் பேசும் தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவ், முதல்வரை வரவேற்க விமான நிலையம் வரவில்லை.
தெலங்கானாவில் இன்று மாலை நடைபெறும் ராமானுஜர் சிலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருக்கிறார்.